திருப்பூர், ஜூலை 4 –
தமிழக அரசின் சாதனை திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்த்திடும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பின் தொடர்ச்சியாக மத்திய மாவட்டம், திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட வாலிபாளையம் பகுதி, 34-வது வார்டு பாகம் எண் 51-ல் உள்ள மக்கள் ஓரணியில் மத்திய மாவட்ட கழக செயலாளர் க. செல்வராஜ் எம்எல்ஏ முன்னிலையில் இணைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் தெற்கு மாநகரச் செயலாளர் டிகேடி மு. நாகராசன், பகுதிச் செயலாளர் உசேன், தொகுதி பொறுப்பாளர் ராமமூர்த்தி, தெற்கு மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் பி.ஆர். செந்தில்குமார், வட்டச் செயலாளர் பி.ஆர்.இ. இளங்கோ மற்றும் கழக உடன்பிறப்புக்கள் உடன் இருந்தனர்.