தஞ்சாவூர், ஆகஸ்ட் 18 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் தஞ்சாவூர் அடுத்துள்ள வடகால் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை நிர்ணயம் செய்தல் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்ற அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
கல்வியில் இடைநிற்றலை தவிர்த்து குழந்தைகளை உயர் கல்வி பெறும் வகையில் நன்கு படிக்க வைக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களில் பெண்கள் அனைவரும் சேர வேண்டும். தொழில் தொடங்குவதற்கு வங்கி கடன் உதவி பெற மகளிர் சுய உதவி குழுவில் அங்கம் வகிப்பதன் மூலம் முன்னுரிமை பெறலாம் என்றார். மாவட்ட கலெக்டர்
மேலும் 6 பேருக்கு விலையில்லா மனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகனேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) கார்த்திக்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



