தஞ்சாவூர், ஜூலை 1 –
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி வாசித்து ஏற்று கொண்டனர்.
மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளரும், போதைப்பொருள் எதிர்ப்பு குழுவின் முதன்மை பயிற்சியாளருமான, கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் முருகானந்தம் தலைமையில் வேதியியல் துறைத்தலைவர் முனைவர் இங்கர்சால், முனைவர் ரவிசங்கர் மற்றும் முனைவர் இளமாறன் முன்னிலை வகித்தனர்.
போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை 100 மாணவ, மாணவியர்கள் எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை வேதியியல் துறை இணை பேராசிரியரும் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலருமான முனைவர் சித்திரவேல் செய்து இருந்தார்.