தஞ்சாவூர், ஆகஸ்ட் 9 –
உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் பௌர்ணமியொட்டி தென் கையிலாய திரு சுற்று வலம் வந்தனர். தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தென் கைலாய திரு சுற்றும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதேபோல் ஆடி மாத பௌர்ணமியையொட்டி தென் கைலாய வலம் வரும் நிகழ்ச்சி மராட்டா கோபுரத்தின் கீழ் பகுதியில் உள்ள விநாயகரை வழிபட்டவுடன் மேளதாளம் முழங்க தேவார பாடல்களை முழங்கிய வண்ணம் நன்னிலம் கைவல்ய நவநீத ஏக நாயகன் தியான மண்டபத்தின் நிர்வாகி தவத்திரு கோரக்சானந்தா சுவாமிகள் கலந்து கொண்டு திருச்சுற்று வலம் வந்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தை சுற்றி வந்து கோவிலுக்கு சென்று பெருவுடையார் பெரிய நாயகி அம்மனை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் கிரிவல குழு பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருச்சுற்றுபாதையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.