தஞ்சாவூர். மே.5
தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் சாமி மடம் உள்ளது. இங்கு அப்பர் பிறந்த நாளையொட்டி கிராம மக்கள் ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் அப்பர் சதய விழாவின் போது அப்பர் சுவாமிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. அப்போது எதிர்பாராத வகையில் மின் கம்பி தேர் மீது உரசியதில் 11 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர் இந்த விபத்துக்கு பிறகு கோவில் திருவிழாவிற்கான பல்வேறு வழி காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது .தமிழக அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்து இந்த விபத்து தொடர்பாக வழக்கை விசாரித்து வருகிறது . விபத்து நடந்த பின்னர், கடந்த ஆண்டு அப்பர் சதய விழா ஒரு நாள் மட்டுமே நடந்தது. இதையடுத்து களிமேடு கிராம மக்கள் சார்பில் அப்பர் பேரவை சார்பிலும் இந்த ஆண்டு 96வது ஆண்டாக அப்பர் சதய விழா 3 நாள் விழாவாக தொடங்கியது. அதன்படி அப்பர் மடத்தில் காலை மங்கள இசையுடன் விழா தொடங்கியது. பின்னர் திருமுறை இசையும், அப்பர் பெருமானுக்கு பால் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேக திருமஞ்சனமும் ,மகேஸ்வர பூஜை யும், ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து கும்பகோணம் கண்ணன் அடிகளார் தலைமையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் சென்னை குன்றத்தூர் பிரபாகர மூர்த்தியின் ஆன்மீக சொற்பொழி வு நடைபெற்றது .அதை தொடர்ந்து அப்பர் சுவாமி புறப்பாடு நடை பெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடு களை கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.