தஞ்சாவூர், ஆகஸ்ட் 26 –
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பேரூராட்சி பகுதியில் தமிழக முதல்வர் அவர்களின் தாயுமானவர் திட்டத்தின் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வல்லம் பேரூராட்சி பகுதியில் தஞ்சாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அன்பு தினேஷ், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வ ராணி கல்யாண சுந்தரம், வல்லம் பேரூராட்சி கழக செயலாளர் கல்யாண சுந்தரம், துணைத் தலைவர் மகாலட்சுமி வெங்கடேசன், கவுன்சிலர்கள் சிங் அன்பழகன், அமுதா அழகர்சாமி, சத்யா அறிமுகம், ஆரோக்கியசாமி அவைத்தலைவர் மாணிக்கம், பொருளாளர் யூசுப், ஒன்றிய பிரதிநிதி ராசு மனோகர், வார்டு கழக செயலாளர்கள் அருளானந்தம், சகாயம், இளைஞர் அணி அமைப்பாளர் ஞானசேகர், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



