தஞ்சாவூர், செப்டம்பர் 24 –
தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சியை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலா ளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர் பில்டர், எலக்ட்ரீசியன், தச்சு வேலை, வண்ணம் பூசுதல், கருமம் கொல்லன், கம்பி வளைப்பவர், கண்ணாடி அறுப்பவர், சலவைக்கல் ஓட்டுபவர் பிளம்மர், ஏசி மெக்கானிக் மற்றும் கட்டிட தொழில் இனங்களில் பணி புரியும் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு 7 நாட்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் மதிய உணவு மற்றும் சிற்றுண்டியும், ஊதிய இழப்பீடு தொகையாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 800 வீதம் வழங்கப்படும் இப்பயிற்சி தொடர்பான மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்)அலுவலக த்தை அணுகி பயன்பெறலாம் என்றார் கலெக்டர்.
நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) நடராஜன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன், தஞ்சாவூர் தொழில் பயிற்சி நிலைய முதல்வர் இஸ்மத் பேகம், உதவி இயக்குனர் (திறன் பயிற்சி) ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



