தஞ்சாவூர், செப்டம்பர் 2 –
தஞ்சாவூர் ஊரக ஒன்றிய ஜூனியர் ரெட்கிராஸ் உலக ரெட்கிராஸ் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா தஞ்சாவூர் கமலா சுப்ரமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் இணை அமைப்பாளர் ஜேசுதாஸ் தமிழ் மாறன் அனைவரையும் வரவேற்றார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ரெட் கிராஸ் கொடியேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
கமலா சுப்ரமணியம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் தாளாளர் சுப்ரமணியம், முதல்வர் மதியரசி ஆகியோர் முன்னிலை வைத்தனர். ரெட்கிராஸ் நிறுவனர் ஹெண்டி டுனான்ட் மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் திறந்து வைத்தார். தொடக்கக்கல்வி மாவட்ட அலுவலர் அய்யாகண்ணு குத்துவிளக்கேற்றினார். தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் பிச்சுமணி ஜெனிவா ஒப்பந்தம் குறித்து விளக்கமாக பேசினார்.
பின்னர் நடந்த போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தொடங்கி வைத்தார். மாவட்ட ரெட் கிராஸ் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார் தனித்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கி வாழ்த்துரையாற்றினார். போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக ஒன்றிய அமைப்பாளர் டெலக்டா ஜோஸ்லி, வெற்றிவேல் ஆகியோர் செய்திருந்தனர். நினைவாக இணை ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் நன்றி கூறினார்.



