தக்கலை, ஆக. 9 –
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தை ஒட்டி குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மௌன ஊர்வலம் மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி தக்கலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். மணலி சந்திப்பில் இருந்து மௌன ஊர்வலம் தொடங்கி, மேட்டுக்கடை வழியாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமைக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மலர் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.