புளியங்குடி, நவ. 11 –
தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் உள்கோட்ட பகுதிகளில் திங்கள் கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை போலீஸாா் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் தீவிர வாகன தணிக்கை நடைபெற்றது.
புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சி நாதன் மேற்பார்வையில் புளியங்குடி மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி, தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் எஸ் ஐ மாடசாமி, எஸ் எஸ் ஐ மணிகண்டன் மற்றும் ஏராளமான போலீஸாா் சாலையின் குறுக்கே பேரிக்காடு அமைத்து சாலைகளின் வெவ்வேறு பகுதிகளில் விடிய விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.



