மதுரை, ஆக. 4 –
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தி பல்வேறு மாவட்டங்களில் உண்ணாநிலை போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பாக உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. மாநில துணை தலைவர் ராமர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், ராமர்பாண்டி, ராமநாதபுரம் பொன்னுதுரை திண்டுக்கல் மகேஸ்வரன், தேனி பாரதராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் போதுமணி கண்ணன் கார்த்திகேயன் அருண்குமார் சங்கரலிங்கம் உட்பட டாஸ்மாக் விற்பனையாளர்கள் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து பல ஆண்டுகளாக தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியுடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மற்ற கோரிக்கைகள்: காலி மதுபான பாட்டில்களைப் பெறும் திட்டத்தை மாற்றுதல் மற்றும் மருத்துவக் காப்பீடு (ESI) வழங்குதல் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலைபோராட்டத்தில் ஈடுபட்டனர்.



