போகலூர், ஜுலை 7 –
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் பழைய பென்சன் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்திட வலியுறுத்தி இந்திய அளவில் நடைபெறும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை இராமநாதபுரம் மாவட்டத்திலும் சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜுலை 9ல் நடைபெறும் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தை சிறப்பாக நடத்திட ஜாக்டோ-ஜியோ உறுப்பு இயக்க பொறுப்பாளர்கள், தங்களின் சங்க பொறுப்பாளர்களிடம் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்களையும் முழுமையாக பங்கேற்க வைப்பது என முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உறுப்பு இயக்க மாவட்ட பொறுப்பாளர்கள் முருகேசன், சிவபாலன், அப்துல் நஜ்முதீன், காசிநாததுரை, ராஜேந்திரன், ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.