சேலம், ஜூலை 28 –
சேலத்தில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. லக்கி ஜெனரல்ஸ் என்ற பன்னாட்டு தொண்டு நிறுவனம் சார்பில் சேலம் சிஎஸ்ஐ பாலர் ஞான இல்லம் குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. இயக்குனர் ஹேரி மற்றும் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, மாணிக்கம் ரிபப்ளிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநில தலைவர் பொண்ணு தம்பி, பள்ளியின் தாளாளர் சேகர் ஜெபசிங், பாமக மாநில இளைஞரணி துணை செயலாளர் அண்ணாமலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் அன்றாட தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தலையணை, போர்வை, தரை விரிப்பு, துண்டு என அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 100 குழந்தைகளுக்கு நல உதவிகளை சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மனவளர்ச்சிக்கு ஒன்றிய குழந்தைகளின் கலை நிகழ்ச்சி அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.