By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாணியம்பாடி அருகே 3 நடுகற்கள் கண்டெடுப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > வாணியம்பாடி அருகே 3 நடுகற்கள் கண்டெடுப்பு
திருப்பத்தூர்மாவட்டம்

வாணியம்பாடி அருகே 3 நடுகற்கள் கண்டெடுப்பு

Last updated: August 12, 2024 1:27 pm
August 12, 2024
90 Views
Share
SHARE

வாணியம்பாடி:ஆக:09, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பழங்கால 3 நடுகற்கள் கண்டெடுத்துள்ளனர். 

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி, வரலாற்று ஆய்வாளர் காணிநிலம் மு.முனிசாமி வாணியம்பாடியைச் சேர்ந்த சித்த வைத்தியர் சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் வரலாற்றுச் சிறப்புமிக்க 3 நடுகற்களை கண்டெடுத்துள்ளனர். 

இது குறித்து முனைவர் க.மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை வடக்குப்பட்டு என்ற கிராமத்தில் தருமராஜா- திரௌபதி அம்மன் ஆலயத்தின் கருவறைக்கு அருகில் 15 அடி உயரத்துடன் சிறிய அளவில் உள்ளது. வலது கையில் வாளை ஏந்திய கோலத்தில் காணப்படுகிறது. இந்நடுகல் வழிபாட்டில் உள்ளது. இக்கோயில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. மீன், பாம்பு உள்ளிட்ட உயிரினங்களின் சிற்பங்கள் இக்கோயிலின் மேல் கூரைகளில் உள்ளன.

இரண்டாவது நடுகல் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கி.பி 16 ஆம் நூற்றாண்டு உடன்கட்டை நடுகல்லாகும். இந்நடுகல்லை இவ்வூர் மக்கள் மலைதேவன் சிலை என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். 25 அடி அகலமும் 2.3 உயரமும் இன்னும் 2 அடி ஆழத்திற்குப் புதைந்தும் இந்நடுகல்லானது காணப்படுகிறது. இச்சிலையின் அமைப்பானது நடுகல் வீரனின் தலைமுடி வாரி முடிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டையாக அது காட்சி தருகிறது. காதுகளில் குண்டலங்கள் உள்ளன. வலது கையில் குறுவாள் ஒன்று ஏந்திய கோலத்தில் வீரன் உள்ளார். வீரனின் வலது பக்கத்தில் வீரப் பெண்மணியின் உருவம் இடம் பெற்றுள்ளது. இப்பெண் இந்நடுகல்லின் மனைவி ஆவார்.வீரன் போரில் வீர மரணம் அடைந்தவுடன் அவனுடைய மனைவியும் இறங்கி நெருப்பில் இறங்கி உயிர் விட்டிருப்பாள். கணவனோடு மனைவி உயிர் விடுதலை உடன்கட்டை ஏறுதல் எனப்படும் . மூன்றாவது நடுகல்லும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கி.பி 16 ஆம் நூற்றாண்டு நடுகல்லே ஆகும். இந்நடுகல் வாணியம்பாடிக்கு அருகே உள்ள திகுவாபாளையம் என்ற ஊரில் பிட்டாய் கவுண்டர் வட்டத்தில் பிரபு குமார் என்பவர் நிலத்தில் உள்ளது. இந்நடுகல்லின் அமைப்பானது 3 அடி உயரமும் 2.5 அகலமும் கொண்டதாக உள்ளது. நடுகல் வீரனின் இடது கையில் தண்டு போன்ற ஆயுதம் ஒன்றும் வலது கையில் நீண்ட வாள் ஒன்றைத் தரையில் ஊன்றியபடியும் நிற்கின்றார். இவ்வீரன் போரில் வீர மரணம் அடைந்ததால் அவன் மனைவி  உடன்கட்டை ஏறித் தன் உயிரை விட்டுள்ளார். உடன்கட்டை ஏறிதற்கான அடையாளமாக வலது புறமாக கள்குடம் ஒன்றைத் தாங்கியுள்ளார். இவை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நடுகற்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் க.மோகன்காதி கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
இல்ல திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ்
தஞ்சாவூரில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் மாணவியின் சாதனை!
தமிழக வெற்றி கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் வலம்புரிவிளை உரக் கிடங்கை மாற்ற வேண்டும்: முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை

May 25, 2026
50 Views
“மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கில்மத்திய அமைச்சர் L. முருகன்
பட்டமளிப்பு விழா மற்றும் 3 ஆம் ஆண்டு கல்வி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account