சென்னை, செப். 18 –
ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப் பொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவுபடி காவல் கூடுதல் ஆணையர், ஆவடி காவல் ஆணையரகம் ஆகியோர் அறிவுரையின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆணையர் வழிகாட்டுதலின் படி செங்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் செங்குன்றம் மதுவிலக்கு அமல் பிரிவு எல்லைக்குட்பட்ட மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டி, எண்ணூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா எனும் போதைபொருள் விற்பனை செய்யபடுவதை தடுப்பதற்காக தீவிர சோதனையில் மொண்டியம்மன் சோதனை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படியாக இருந்த நபர் ரவிந்தர் என்பவர் வைத்திருத்த ஷால்Lர் பையை சோதனை செய்து பார்த்த போது அவரிடம் இருந்து சுமார் 10.500 கிலோ எடை கொண்ட காஞ்சாவை கைப்பற்றி மேற்படி நபர் மீது செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலைய போலீசாரால் குற்ற வழக்குபதிவு செய்து எதிரியை குற்றவியல் நடுவர்-2 நீதிமன்றம் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேற்படி எதிரி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



