நாகர்கோவில், அக். 25 –
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக குமரியில் மழை பெயந்து வருகிறது. மழையின் காரணமாண நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் செண்பகராமன்புதூர் பகுதியில் மழையால் மூழ்கி நெல் வயல்கள் சேதமடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட நெல் வயல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் அமைச்சர் மனோதங்கராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: 3.5 ஹெக்டேர் நெல் வயல்களில் கதிர்கள் சாய்ந்து முளைத்து, முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இது தவிர செண்பகராமன்புதூர் வட்டாரத்தில் இன்னும் 5 ஹெக்ட்டர் நெல் வயல்கள் நீரில் மூழ்கி விட்டது. மழையால் மூழ்கி சேதமடைந்துள்ள நெற்பயிர்களை விவசாயிகள் எடுத்து காண்பித்து சேதமடைந்த பயிர்களை கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும் மாவட்டத்தில் பருவமழை பெய்து வருவதால் தற்போது வேளாண் துறை அலுவலர்கள், துறை அலுவலர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள பயிர்களின் விவரங்களை கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ். காளீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெங்கின் பிரபாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பாதேவி, தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், தோவாளை மண்டல அலுவலர், தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர், தோவாளை வட்டார வேளாண்மை அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



