செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அஞ்சூர் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள சிறப்பு வகுப்பறை மற்றும் உயர் தொழில்நுட்ப கல்வி ஆய்வகத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் /வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சமய மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் மற்றும் சார் ஆட்சியர் நாராயண சர்மா மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ் உட்பட பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



