பரமக்குடி, ஜூன் 20 –
பரமக்குடி ஒன்றியம் சுப்புராயபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கால்நடை துறை சார்பாக ஒன்றியம் வாரியாக கிராமம் தோறும் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பரமக்குடி ஒன்றியம் சுப்பராயபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மண்டல இணை இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் 51 பயனாளிகளின் பசுமாடு, ஆடு, கோழி, நாய் உள்ளிட்ட 1672 கால்நடைகளுக்கு சிகிச்சை, அறுவை சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், ஆண்மை நீக்கம், குடற்புழு நீக்கம் போன்ற பணிகள் செய்யப்பட்டன. மாடுகளுக்கு கால்கானை, வாய்க்கானை மற்றும் கன்று வீச்சு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நின் ஆடுகளில் ஆட்டுக்கொல்லி நோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நோட்டீஸ் விவசாய பெருமக்களுக்கு வழங்கப்பட்டது. முகாமில் சிறந்த கிடேரி கன்றுகளின் உரிமையாளர் மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் விக்னேஷ், நந்தினி, கால்நடை ஆய்வாளர் பூபதி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.