தூத்துக்குடி, ஜுன் 1 –
சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா உள்பட்ட வல்லநாட்டியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்ஸ்ரீநாத் ,குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் கு.சரவணன் ஆகியோர் கள், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த மாவீரன் வீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள் விழா இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, வல்லநாடு மணிமண்டபத்தில் அமைந்துள்ள வெள்ளையத்தேவனின் திருவுருவச் சிலைக்குப் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் மற்றும் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர்கு.சரவணன் ஆகியோர் அன்னாரது திருவுருவக் சிலைக்குப் மாலை அணிவித்து பூக்களைத் தூவி, மரியாதையைச் செலுத்தினார்.
இவ்விழாவில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் மி.பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாஹிர் அஹமது, மாவீரன் வீரன் வெள்ளையத்தேவனின் வாரிசுதாரர்கள் அ.மாரிமத்து, பல்வேறு அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்படப் பலரும் விழாவில் திரளாகக் கலந்து கொண்டனர்.



