சுசீந்திரம், அக். 13 –
சுசீந்திரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் தலைமையில் போலீசார் சுசீந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு சிறுவனை பிடித்து விசாரித்த போது அவனது வயது 17 என்பதும் பிளஸ் 1 மாணவன் என்பதும் தெரியவந்தது. வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் மேற்படி இந்த இளஞ்சிறார் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தும் வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதித்த இளஞ்சிறாரின் தாயான சுசீந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறை மணவிளை எஸ். ன். பெருமாள் தெருவை சேர்ந்த மகேஸ்வரி (45) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


