By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மோதல்: 6 பேர் படுகாயம்: போலீஸ் குவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மோதல்: 6 பேர் படுகாயம்: போலீஸ் குவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மோதல்: 6 பேர் படுகாயம்: போலீஸ் குவிப்பு

Last updated: July 6, 2026 7:56 pm
July 6, 2026
51 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 6 –

கன்னியாகுமரி சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தை தளமாக கொண்டு சுமார் 350 மீன்பிடி விசைப்படகுகள் உள்ளன. இதில் சுமார் 270 விசைப்படகுகள் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தது ஆகும். மற்ற படகுகள் சின்ன முட்டம் பகுதி சேர்ந்தவை. ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகள் கடலுக்கு செல்ல வேண்டும். இரவு 9 மணிக்குள் கரை திரும்ப வேண்டும். இந்த நேர கட்டுப்பாட்டை மீறி சென்றால் விசைப்படகு உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து ஏற்கனவே மீன்வளத் துறை சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் விசைப்படகுகள் சென்று வர அனுமதிப்பதற்காக வழிப்பாதையில் கட்டப்பட்டுள்ள ராட்சத கயிறு அறுந்தது. இதனால் எந்த நேரத்திலும் விசைப்படகு உள்ளே வந்து விட்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டது. நுழைவுப்பகுதியில் கயிறு அறுந்து அடைப்புகள் நீங்கியது தெரிந்ததும் மீன்வளத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை பயன்படுத்தி கடந்த 4ம் தேதி குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே சில விசைப்படகுகள் கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு அதிக அளவில் மீன்களும் கிடைத்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் இன்று திங்கள் அதிகாலை சுமார் 2 மணியளவில் 8 விசைப்படகுகள் நேர கட்டுப்பாட்டை மீறி கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளன. இது குறித்தது தகவல் கிடைத்ததும் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர காவல் படையினர் சம்பவ பகுதிக்கு வந்து சின்ன முட்டம் மீன்பிடித்துறைமுக நுழைவாயில் பகுதியில் லாக் செய்தனர்.
இதனால் மற்ற விசைப்படகுகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அதிகாலை சுமார் 5 மணியளவில் புறப்பட இருந்த விசைப்படகுகள் செல்ல முடியாதால் மீனவர்களுடைய கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் அங்கு திரண்டு, சின்ன முட்டத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் தான் நேரக் கட்டுப்பாட்டை மீறி சென்றுள்ளன. எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என கேட்டு மீன் வளத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து, துறைமுக நுழைவு பகுதியில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது கன்னியாகுமரி மற்றும் சின்ன முட்டத்தை சேர்ந்த மீனவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கோஷ்டி மோதல் வெடித்தது. மாறி மாறி இரு தரப்பினரும் தாக்க தொடங்கினார். தொடர்ந்து கற்கள் வீசியதில் சின்னமுட்டம் பகுதியில் உள்ள சில வீடுகளில் கண்ணாடிகளும் உடைந்தன.

சம்பவம் குறித்து அறிந்ததும் கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட எஸ்பி ஸ்டாலின் விரைந்து சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நேரம் செல்ல பதட்டம் அதிகரித்தது. கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். திருநெல்வேலியில் இருந்து டிஐஜி திருநாவுக்கரசும் உடனடியாக சின்ன முட்டம் வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

துறைமுகத்தில் விசைப்படகு நுழைவு பகுதியில் ராட்சத கயிறு சேதம் அடைந்து இருந்தது தெரிந்ததும், மீன்வளத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் நேரக்கட்டுப்பாட்டை மீறி விசைப்படகுகள் சென்றுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர். முதற்கட்டமாக ஆறு பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

புத்தேரி பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
நாகர்கோவிலில் ரூ.76.50 லட்சத்தில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்
கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
கிருஷ்ணகிரியில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா: மாவட்ட செயலாளர் தே.மதியழகன் துவக்கி வைத்தார்
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணமுரளியை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அரியலூர் மாவட்ட நகரில் வழக்கறிஞர்கள் போராட்டம்

July 2, 2024
116 Views
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
குவைத் நாட்டில் தீ விபத்தில் மரணமடைந்த க.ராமு
மழைநீர் வடிகால் ஓடைப்பணி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account