தருமபுரி, ஜூலை 24 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிக்கார்த்தன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கார்த்தன அள்ளி கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கரக செல்லியம்மன் கோயில் நிலம் 33 ஏக்கர் 42 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஏலம் விட கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நிலத்தை பொது ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஏலத்துக்கு சேலம் இணை ஆணையர் பொது ஏலம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஆனால் இந்த உத்தரவை செயல்படுத்தாமல் ஒராண்டுக்கும் மேலாக ஏலம் விடாமல் இந்த கோவில் அறங்காவலர் குழுவினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவை மீறி இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலத்தை ஏலம் விடாததால் கரக செல்லியம்மன் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி கோயில் நிலத்தை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.