மடத்துக்குளம், ஆகஸ்ட் 06 –
திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின் போது உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்களின் குடும்பத்தினரை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் இன்று (06.08.2025) திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே மாவட்ட வருவாய் அலுவலர் க. கார்த்திகேயன், மாநகர துணை காவல் ஆணையர் திருமதி தீபா சத்தியன், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. பத்மினி ஆகியோர் உள்ளனர்.