நாகர்கோவில், ஆகஸ்ட் 18 –
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 23 மாத கால ஓய்வூதிய பலன்கள் உடனே வழங்க வேண்டும். ஓய்வுதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெரும் அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதிய உயர்வு, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
வாரிசு வேலை வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
இதற்கு அரசு போக்குவரத்து கழக சிஐடியு பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமை வைத்தார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



