பூதப்பாண்டி, ஆகஸ்ட் 07 –
பூதப்பாண்டி அருகேயுள்ள இறச்சகுளம் முதல் திட்டு விளை வரையிலான நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூராக வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் கடைகளின் மேலுள்ள தடுப்புகள் மற்றும் அனுமதியின்றி கடைகளின் முன்பு அமைக்கப்பட்டுள்ள அலங்கார தரை கற்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு தோவாளை வட்டார நெடுஞ்சாலைதுறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனை நேற்று தோவாளை வட்டம் நெடுஞ்சாலைதுறை உதவி கோட்டப் பொறியாளர் டென்னீஸ் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதில் இளநிலை பொறியாளர் எப்சி பாய் ஜோன்ஸ், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.