நாகர்கோவில் மே 10
குமரி மாவட்டத்தில் எந்த வருடமும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கத்தால் கால்நடைகள், வனவிலங்குகள், பறவைகள், மனிதர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாநகராட்சிக்கு குடிநீர் தரும் முக்கடல் அணையும் தற்போது வரண்டு வரும் நிலையில் மாநகராட்சி சார்பில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் தண்ணீர் திறக்கும் போது அழுத்தம் காரணமாக தரம் குறைந்த பைப்புகள் உடைந்து தண்ணீர் வீணாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் தற்போது புதிதாக போடப்பட்ட தார்சாலை சேதம் அடைந்து உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
மாநகராட்சியில் ஆணையர், பொறியாளர மற்றும் அதிகாரிகள் ஒரு தொலைநோக்கு திட்டத்துடன் ஆலோசனை செய்யமல் பணிகள் செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. அது போன்று தான் பாதாளச்சாக்கடை திட்ட பணிகளும்.
பாதாளச்சாக்கடை திட்டத்தால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை மக்களுக்கு பெரும் சிரமங்களையும் மக்களின் வரிப்பணமும் தான் வீணடிக்கப்படுகிறது. லைகள் போடுவது மறுநாள் சாலைகளை தோண்டுவது போன்ற சரியான திட்டமிடுதல் இல்லாத பணியை மாநகராட்சி செய்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும் இதனை கண்டு கொள்ளுவதில்லை என மாநகராட்சி மீதும், மாவட்ட நிர்வாகம் மீதும் குற்றம் சாட்டினார்.