தென்தாமரைகுளம், ஆக. 16 –
கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நலம் கல்வி அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதி வளாகத்தில் பால பிரஜாபதி அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக புதிய உலகம் நிறுவனர் சஜீஷ் கிருஷ்ணா, திமுக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாபு, இலவச சட்ட உதவி சங்கம் தலைவர் சுபாஷ் நாடார், திமுக வழக்கறிஞர் சரவணன், கலப்பை மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாநில மகளிர் அணி தலைவி வரலெட்சுமி, அனிதா, ஒன்றிய செயலாளர் செந்தில், இளைஞர் அணி ரவி முருகன், சமூக ஆர்வலர் ஜெய சுதா, பேச்சாளர் நாஞ்சில் அமலன், ராஜ சேகர், நலம் அறக்கட்டளை தூத்துக்குடி நிர்வாகிகள், மருத்துவர்கள் சுதா, சுபிசன், நரம்பியல் சிகிச்சை மையம் மருத்துவர்கள் டாக்டர் மரிய சுபிசன், (மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்), பிஸியோ தெரப்பிஸ்ட் டாக்டர் பாலன், ஜோசப் சகாயம் மருத்துவமனை மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் இந்த பொது மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். முடிவில் நலம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் நலம் குமார் நன்றி கூறினார்.



