சுசீந்திரம், மே 16 –
சுசீந்திரம் அருகே உள்ள வடக்கு தாமரைக்குளம் குலாளர் தெருவை சார்ந்தவர் சதீஷ் (47). இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இன்று சுசீந்திரம் பைபாஸ் ரோட்டு அருகே உள்ள சர்பத் கடையில் சர்பத் குடித்துக் கொண்டிருக்கும் பொழுது வழுக்கம்பாறை பல்பநாபன்புதுர் பகுதியைச் சார்ந்த பால் பிரிண்ஸ் (32) என்பவரும் அதே பகுதி சார்ந்த மகேஷ் (40) என்பவரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
சர்பத் குடித்துக் கொண்டிருந்த சதீஷை பார்த்து பால்பிரின்ஸ் பாக்கெட்டில் எவ்வளவு பணம் வைத்துள்ளாய் ரூபாயை எடு என மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்த 1700 ரூபாயினை எடுத்துக்கொண்டு இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என கொலைமிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து சதீஷ் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பணத்தைப் பறித்து சென்ற பால் பிரின்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



