திருப்பூர், செப்டம்பர் 18 –
சங்கரமநல்லூர் பேரூராட்சி திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம் நடைபெற்றது. பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் முன்னாள் உறுப்பினர் ஜெய ராமகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். மடத்துக்குளம் வட்டாட்சியர் குணசேகரன் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது, சங்கரமநல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்புசாமி, துணைத்தலைவர் பிரேமலதா உத்தமராஜ், செயல் அலுவலர் பழனியப்பன், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.



