தென்காசி, ஆகஸ்ட் 28 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பொதுமக்கள் பிரிவு கபடி போட்டி சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் பிரிவை சேர்ந்த 10 அணிகள் பங்கேற்றனர்.
இதில் ஆண்கள் பிரிவில் திப்பணம்பட்டி சாரல் அணியை சேர்ந்தவர்கள் முதல்பரிசையும், குரும்பலாபேரி ஜூனியர் கேஎம்சி பிரிவை சேர்ந்த அணியினர் 2வது பரிசையும், வெக்காளிப்பட்டி செவன் ஆர்மி அணியினர் 3வது பரிசையும், தட்டிச் சென்றனர். பெண்கள் பிரிவில் ஆலங்குளத்தை சேர்ந்த செவன் குயின் அணியினர் முதல் பரிசை தட்டி சென்றனர்.
முதலமைச்சரின் பொது மக்கள் பிரிவுக்கான கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேவில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது தென்காசி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் அருள் இளங்கோவன், இணைச்செயலாளர் அலெக்ஸாண்டர் தங்கம், திமுக நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் அனைத்து பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள், கபடி போட்டி நடுவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.



