சங்கரன்கோவில், ஆகஸ்ட் 26 –
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் நகரப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வைசிய சங்க உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா, நகராட்சி கமிஷனர் சாம் கிங்ஸ்டன், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துமாரி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 178 பேர்களுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ காலை உணவினை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார். அதன் பின்னர் எம்எல்ஏ ராஜா மாணவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார். இந்த திட்டத்தின் மூலம் 10 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் 1188 பேர் பயனடைகின்றனர்.
துவக்க விழா நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் இர்வின் ஜெயராஜ், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி கைலாசம், திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ், வணிக வைசிய சங்க தலைவர் சங்கர், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சங்கரகோமு, துணை தலைவர் ஓம் சக்தி, உறுப்பினர் மாரியப்பன் மற்றும் கவுன்சிலர்கள் புனிதா, செல்வராஜ், உமாசங்கர் மற்றும் திமுகவை சேர்ந்த நகர அவைத்தலைவர் முப்பிடாதி, முன்னாள் வர்த்தக அணி துணை அமைப்பாளர் பத்மநாபன், நகர துணைச் செயலாளர் சுப்புத்தாய், நகர மாணவரணி வெங்கடேஷ், நகர இளைஞரணி வீராச்சாமி, ஜான்சன், வார்டு பிரதிநிதி தினேஷ் பாபு மற்றும் பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



