கோவை, 20.08.2026.
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகள் நல சங்கம் சார்பில் 2025-2026 க்கான பொதுக்குழு கூட்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பணவர், சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜா அவர்கள் முன்னிலை வகித்தார். கடந்த ஆண்டு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் பொதுமக்களுக்காக கொண்டுவரப்பட்டது வரும் காலங்களில் மருத்துவமனையை இன்னும் பல்வேறு கட்டங்களுக்கு உயர்த்துவதாக தீர்மானிக்கப்பட்டது.
இதில் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் கூறுகையில் நோயாளிகள் நல சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கக்கூடிய முன்னேற்பாடுகள், நோயாளிகளுக்கு அல்ட்ரா ஸ்கேன் வசதிகளை போன்றவை செய்து தரக்கோரி ஆலோசனைகளை வழங்கினர்.



