கோவை, ஜூலை 22 –
கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பேரூராட்சி அருள்மிகு நாகாத்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவிலில் நாகாத்தம்மன் புற்று கோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருக்கோவிலின் கலச கும்பாபிஷேகம் கோவில் நிர்வாகம் கருப்பாத்தாள் என்கிற பாப்பம்மாள், சுந்தரன், சிவராஜ், வள்ளி செல்லம்மாள், நந்தகோபால் மற்றும் அவரது குடும்பத்தினரின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கலச கும்பாபிஷேகம் விழாவில் காடம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராணி தங்கராஜ் மற்றும் தங்கராஜ், இந்து மக்கள் இயக்கம் சக்தி சேனா மாநில செயலாளர் நேரு நகர் என். நாகராஜன் ஆகியோர் கொண்டனர். திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ கால பைரவர் ஆலய தலைமை அர்ச்சகர் சிவஸ்ரீ குருநாதன் சிவாஜி யார் மற்றும் ஸ்ரீ விஜய கணபதி ஆலய ஆஸ்தான அர்ச்சகர் ஸ்ரீ சிவப்பிரகாஷ் சிவம், சண்முகநாதர் பூசாரி சங்கர் என்கிற ரா. சண்முக சுந்தரம் ஆகியோர் யாக பூஜைகள் கணபதி ஹோமம் மற்றும் கலச கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
நாகாத்தம்மன் திருக்கோவில் கலச கும்பாபிஷேகம் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நேரு நகர், சுப்பிரமணியம் நகர், விஜய கணபதி, ஸ்ரீ ஜோதி சுரூபம் ஐயப்ப சுவாமி, ஸ்ரீ வள்ளி தெய்வானை, சமேத சுப்பிரமணிய சண்முகநாதர் திருக்கோவில் சார்பாக விஜயலட்சுமி தாமோதரன், என். நந்தகோபால் மற்றும் செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், ஜெயபிரகாஷ் ஆகியோர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து இருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.