கோவை, ஆகஸ்ட் 05 –
கோவை மாவட்டம் செரயாம்பாளையம் பகுதியில் உண்ணாமலை புரோமோட்டர்ஸ் சார்பில் கார்த்திபுரம் என்ற புதிய நகரம் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு 185 ஏக்கரில் 1,850-க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கார்த்திபுரத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு உண்ணாமலை புரோமோட்டர்ஸ் நிறுவனர் பி. கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இயக்குனர் நவீன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு 1,000 மரக்கன்றுகளை நட்டனர்.
நிழல்களை தரக்கூடிய 10 வகையான மரக்கன்றுகளை நட்டனர். இதில் ரமணிசங்கர், சிவக்குமார், பொன்னுச்சாமி, அரிமா சங்கத்தை சங்கர் அசோசியேட்ஸ் பொன்னுச்சாமி உள்பட சேர்ந்த மோகன்குமார், சங்க பலர் கலந்து கொண்டனர். இது குறித்து நிறுவனர் பி. கார்த்திகேயன் கூறும்போது, கார்த்திபுரத்தில் அதிக நிழல்களை வகையை சேர்ந்த 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. இந்த மரக்கன்றுகள் அனைத்தும் 12 அடி உயரம் முதல் 14 அடி உயரம் கொண்டது ஆகும் என்றார்.



