ஈரோடு, செப். 17 –
இந்தி மொழி நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட நாள் ஆண்டுதோறும் இந்தி தினமாக செப்டம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் இந்தி மற்றும் பிற மொழிகள் துறை சார்பாக இந்தி தினம் கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சுவரொட்டி தயாரித்தல், ஒரு நிமிடப் பேச்சு, பாட்டைக் கண்டுபிடி மற்றும் குழு நடனம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை இந்தி மற்றும் பிற மொழிகள் துறை இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் வி. அன்புமணி மற்றும் மாணவ, மாணவியர் செய்திருந்தனர். இவ்விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரியின் தாளாளர் பி. சச்சிதானந்தன் மற்றும் முதல்வர் முனைவர் ஹ. வாசுதேவன் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.



