களியக்காவிளை, டிச. 1 –
குழித்துறையை அடுத்த திரித்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் மனைவி லீலா (65). இவர் நேற்று முன்தினம் இரவு குழித்துறையில் இருந்து பொருட்கள் வாங்கிவிட்டு சாலை நடந்து சென்றுள்ளார். குறிப்பிட்ட பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாகர்கோவில் இருந்து களியக்காவிளை நோக்கி வந்த கார் ஒன்று லீலா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லீலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் களியக்காவிளை போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காரை ஓட்டி வந்த அழகிய பாண்டிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


