ஈரோடு, ஆக. 15 –
ஈரோட்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா ஈரோடு ஆணைக்கல் பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மூவர்ண பலூன் பறக்க விடப்பட்டது. பிறகு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து காவலர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் 145 பேர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் 40 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.
இதன் பிறகு பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை பிரியா, மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. காஞ்சன் சௌதரி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



