குளச்சல், நவ. 10 –
குளச்சல் துறைமுக தெருவில் உள்ள பழைய பாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக 35 வயது மதிக்கதக்க வட மாநில வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். அவர் சற்று மன நலம் பாதித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பழைய பாலம் கடற்கரையில் தண்ணீரில் வாலிபர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியினர் குளச்சல் மரைன் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
மரைன் எஸ் ஐ சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். வாலிபரின் உடலில் சிறிய காயங்கள் இருந்தன. பழைய பாலத்தின் தூணில் உடல் மோதியதால் காயம் ஏற்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது. வாலிபர் யார்? எப்படி இங்கு வந்தார்? எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



