தென்காசி, செப்டம்பர் 10 –
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் சுமார் 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையை தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பழனி நாடார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், வட்டாரத் தலைவர் பெருமாள், குற்றால நாதர் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் வீரபாண்டி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



