தென்காசி, அக். 9 –
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் பாஜக அரசும் இந்திய தேர்தல் ஆணையமும் இணைந்து வாக்குத்திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்திருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் இறுதியாக பழனி நாடார் எம்எல்ஏ பாஜக அரசையும் இந்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து கண்டன உரையாற்றினார். ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், கொடிகுறிச்சி முத்தையா, சட்டநாதன், பால் துரை, தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், வட்டாரத் தலைவர்கள் பெருமாள், கதிரவன், குமார் பாண்டியன், நகர் மன்ற உறுப்பினர்கள் ரஃபீக், சுப்பிரமணியன், நகரத் தலைவர்கள் ஜெயபால், ராமர், உமாசங்கர், பால்ராஜ் மற்றும் சுரேஷ் இளவரசன், முப்புடாதி பாண்டியன் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



