நாகர்கோவில் பிப் 7
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குற்றவாளிகளுக்கு நீதிமன்ற விசாரணையில் தண்டனை வாங்கித் தருவதில் முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்தில் 22.11.2014 அன்று நிலப்பிரச்சனை காரணமாக தக்கலை பகுதி சேர்ந்த செல்லப்பன்(75) என்பவரை கீழமூலச்சல் நாராயணன் என்பவரின் மகன் சுகுமாரன்(64) என்பவர் அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு பத்மநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி அக்குற்றவாளிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள்.
விசாரணைக்கு உறுதுணையாக இருந்து நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தர காரணமாக இருந்த தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பார்த்திபன்,ஆய்வாளா் கிறிஸ்டி, தலைமைக்காவலா் மேரி சோபா ஆகியோரை எஸ் பி வெகுவாக பாராட்டினார்.