By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
தென்காசி

தென்காசியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

Last updated: September 6, 2025 3:05 pm
September 6, 2025
46 Views
Share
SHARE

தென்காசி, செப்டம்பர் 6 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம் வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” பன் நோக்கு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு. சதன் திருமலைக்குமார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்ததாவது: பொது மக்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் துவக்கி வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம் வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெறும் முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிர் நலம், குழந்தைகள் நலம், இருதயவியல், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை, நுரையீரல் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை போன்ற அனைத்து சேவைகளும் தகுதியுள்ளவர்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம். இம்முகாமில் தொழிலாளர் நல வாரியம் மூலம் 12 தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலார் நல வாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.

இம்முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கோவிந்தன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. பிரேமலதா, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தொழிலாளர் உதவி ஆணையர் கௌரி ஜெனிபர், வட்டார மருத்துவ அலுவலர் மரு. மகாலெட்சுமி, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் கௌசல்யா, வீரசிகாமணி ஊராட்சிமன்ற தலைவர் அரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன் மற்றும் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
பருவ மழை நீர் தேங்காமல் தடுக்க ஆலோசனை கூட்டம்
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
மரக்கன்றுகளை நட்ட காவல்துறை
சங்கரன்கோவில் நகராட்சி பகுதி வியாபாரிகளுக்கானபிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்சென்னைதமிழ்நாடு

சென்னை அருள்மிகு ஸ்ரீ இரத்தின கணபதி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது

June 5, 2026
4 Views
தாறுமாறாக பேருந்தினை இயக்கிய டிரைவர்
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்மகா கும்பாபிஷேக விழா
வேலு நாச்சியாரின்9 ஆம் ஆண்டு வீரவணக்க
பைங்குளம்: சாலை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account