நாகர்கோவில், ஜூலை 23 –
குமரி மாவட்ட கடல் பகுதிகளில் 2.7 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய கடல்சார் சேவை மையம் அறிவித்துள்ளது. குமரி மாவட்ட கடல் பகுதியில் நீரோடி முதல் ஆரோக்கிய புரம் வரை 12 முதல் 13 வினாடிகளுக்கு ஒருமுறை 2 முதல் 2.7 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. இது கள்ளக்கடல் என்பதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கின்றவர்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலை 23-ம் தேதி நள்ளிரவு வரை காணப்படும் என்றும் இந்திய கடல்சார் ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


