சங்கரன்கோவில், செப். 27 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் கீழநீலிதநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தோனுகால், ஆயாள்பட்டி, வண்ணம்பொட்டல் ஆகிய கிராமங்களுக்கு கீழநீலிதநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகா ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமையில் ஊராட்சி மன்றத் தலைவர் கோதையம்மாள் பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், சங்கரன்கோவில் நகரச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு தலைவர் ராஜ் என்ற கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பூலியூர் கணேசன், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் தனசேகரன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வீமராஜ், கிளைக் செயலாளர்கள் முத்துராமலிங்கம், வெள்ளக்குட்டி, நாகராஜன், பவுன்ராஜ், மரிய சுந்தர்ராஜ், கருப்பசாமி, வேல்துரை, தீலிப், ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் மெகுமான், பழனிக்குமார், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தங்கத்துரை, இளைஞர் அணி சிவா, குமார், சரவணன், ஆனந்த், ஊராட்சி செயலாளர் மகாராஜன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



