கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆகிய குற்றங்களில் ஈடுப்படும் வழக்கமான குற்றவாளிகள், குற்ற வரலாற்று தாள் (History Sheet) பராமரிக்கப்படும் நபர்கள் மற்றும் சட்டவிரோதாமான செயல்களலான, கள்ளதனமாக மது விற்பனை, கஞ்சா விற்பனை. லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், சூதாட்டம், குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுப்படுபவர்கள், பாலியல் தொழிலில் ஈடுப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்துவந்த எதிரிகள் மீது
33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ5.20,000/- மதிப்பிலான சுமார் 52 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கடந்த 21.04.2024 ம் தேதி கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியூர் கிராமத்தில் சுமார் 30 Kg கஞ்சா மற்றும் 01.05.2024 ம் தேதி ஜூஜூவாடி சோதனைசாவடியில் 10 Kg கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
சட்டத்திற்கு புறம்பாக தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 138 நபர்கள் மீது 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ37,35,296/- மதிப்பிலான சுமார் 3,800 கிலோ குட்கா பறிமுதல் செய்யபட்டு அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனம், 12 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டத்திற்கு புறம்பாக தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை செய்த 89 நபர்கள் மீது 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ 42.185/- மதிப்புள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யபட்டது.
சட்டத்திற்கு புறம்பாக அரசு மதுபானம் மற்றும் வெளிமாநில மதுபானங்களை கள்ளதனமாக விற்பனை செய்த எதிரிகள் மீது இவ்வாண்டில் ஏப்ரல் மாதம் முடிய 2132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2147 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ50,56,128/- மதிப்பிலான சுமார் 7524 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 05.04.2024 ம் தேதி மத்திகிரி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பேளகொண்டப்பள்ளியில் சுமார் 835 (180 ml) கர்நாடகா மாநில மதுபான பாட்டில் மற்றும் மத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மஜித்கொல்லஹள்ளி கிராமத்தில் சுமார் 510 (180 ml) அரசு மதுபான பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை சட்டம் – ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்திய 10 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கொலை வழக்கில் ஈடுப்பட்ட 6 நபர்கள், குற்ற வழக்கில் ஈடுப்பட்ட 3 நபர்கள், கள்ளசாரயம் வழக்கில் ஈடுப்பட்ட ஒருவரும் ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், மணல் கடத்தல். பனங்கள் விற்பனை, விபச்சார தொழில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் காவல் துறையினருக்கு 100 மற்றும் 9498181214 என்ற தொலைபேசி எண் மூலமாக அல்லது Whatsapp மூலமாக தகவல் தெரிவிக்கலாம். மேற்படி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் ஏதேனும் நேரிட்டால் இலவச அழைப்பு எண்:1098 மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு இலவச எண்.181- யை
தொடர்புகொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பு

Leave a comment