கிருஷ்ணகிரி, ஜூன் 30 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட நபர்கள் பாஜகவில் இருந்து விலகி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் தலைமையில் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்த அனைவரையும் வரவேற்று அனைவருக்கும் கழகத்துண்டு அனுவிக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட கழக செயலாளர் மதியழகன் அவர்கள் ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு புடவையும் வழங்கி கழகத்தில் இணைந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். பின்னர் அவர்களுக்கு எவ்வாறு திமுகவில் பணியாற்ற வேண்டும், கழகத்தின் கொள்கை கோட்பாடுகளை விளக்கி எவ்வாறெல்லாம் செயல்பட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.
மேலும் பாஜகவை சேர்ந்த பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதேவி கல்பனா, பாஜக துணைத் தலைவர் தபால்மேடு வெண்ணிலா, பாஜக வர்த்தக பிரிவு ஒன்றிய தலைவர் தொகரப்பள்ளி நந்தகுமார், பாஜக கிளை தலைவர் பில்லகொட்டாய் சக்தி, தொகரபள்ளி அலமேலு, தொகரப்பள்ளி விஜய், பாஜக இளைஞரணி துணைத் தலைவர் குட்டூர் மோகனரங்கன், தொகரப்பள்ளி நவீன், பாஜக மகளிர் அணி செயற்குழு உறுப்பினர்களான பிரியதர்ஷினி, சசிகலா, தெய்வானை, கலைசெல்வி, மாது, ஷயின்ஷா, கஸ்தூரி, குட்டூர் தினேஷ், பட்டலபள்ளி சத்தியமூர்த்தி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நபர்கள் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த இணைப்பு விழா நிகழ்ச்சி எஸ். ஞானவேல் ஏற்பாட்டில் மாவட்ட அவைத் தலைவர் டி.ஏ. நாகராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே. கிருபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழகச் செயலாளர் அறிஞர், வி.ஜி. ராஜேந்திரன், கோவிந்தன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி. நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பி.டி. அன்பரசன், ஒன்றிய துணை செயலாளர் ராஜ் என்கிற ராஜதுரை, திருப்பதி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கர், பிரபு, ஞானவேல் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்.