கன்னியாகுமரி, நவ. 3 –
உத்திர பிரதேச மாநிலம், விஹங்கம் யோக ஸன்த்தான் அமைப்பின் 102வது ஆண்டு விழா மற்றும் 25,000 விஸ்வஷாந்தி மகாயஜ்ஞம், தேசிய அளவிலான “ஸ்வர்வேத்” ஞானப் பிரச்சாரம், ‘சமர்ப்பண் தீப ஆன்மீக மகோத்ஸவம்’ ஆகியவை கன்னியாகுமரியில் இன்று நடைபெற்றது. இந்த ஆன்மீக விழா அனைத்து இராணுவ தியாகிகளுக்கும் மற்றும் சுதந்திரப் போராளிகளுக்கும் நினைவு கூரவும் அவர்களை கவுரவிக்கவும் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.
விழாவில் ஸந்த்ப்ரவர்ஸ்ரீ விஞான தேவ்ஜி மகாராஜ் புனித யாத்திரையாக கன்னியாகுமரிக்கு வருகை தந்து திவ்யவாணி உரை மற்றும் தியானப் பயிற்சியை வழங்கினார். வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்த ஜி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ (கன்னியாகுமரி), டாக்டர் எம்.ஆர். காந்தி (நாகர்கோவில்) ஆகியோர் பங்கேற்றனர்.



