By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவேரி மருத்துவமனையின் உலகின் முதல் டிரான்ஸ்கதீட்டர் ஈரிதழ் வால்வு மாற்று சிகிச்சை செய்து சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > காவேரி மருத்துவமனையின் உலகின் முதல் டிரான்ஸ்கதீட்டர் ஈரிதழ் வால்வு மாற்று சிகிச்சை செய்து சாதனை
சென்னை

காவேரி மருத்துவமனையின் உலகின் முதல் டிரான்ஸ்கதீட்டர் ஈரிதழ் வால்வு மாற்று சிகிச்சை செய்து சாதனை

Last updated: October 7, 2025 11:34 am
October 7, 2025
32 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர் 07 –

சென்னையை சேர்ந்த 83 வயது மூதாட்டிக்கு மார்பைத் திறக்காமல் தொடை சிரை வழியாகவே இதய வால்வை மாற்றி சென்னை ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனை ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த மூதாட்டிக்கு பல இணைநோய்கள் இருந்தன. கடுமையான ‘மைட்ரல் ஆனுலர் கால்சிஃபிகேஷன்’ பாதிப்பால் அவரது இதய வால்வு செயலிழந்த நிலையில், மீண்டும் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். ஏற்கனவே இருமுறை புற்றுநோய்க்காக கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்ததால், திறந்த இதய அறுவை சிகிச்சை என்பது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என இந்தியாவின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறிவிட்டனர்.

கடுமையான கால்சியம் இதயத்தில் உள்ள மைட்ரல் (ஈரிதழ்) வால்வு, திறந்து மூடும் ஒரு கதவு போன்று இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது. ஆனால், எம்.ஏ.சி பாதிப்பில், இந்தக் கதவின் சட்டம் பாறை போல இறுகி, சுண்ணாம்பு பூசி அடைத்தது போல் ஆகிவிடுகிறது. இதனால் மூச்சுத்திணறல், கடும் சோர்வு, இதய செயலிழப்பு என நோயாளிகள் உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இந்நிகழ்வில் காவேரி மருத்துவமனையின் டிரான்ஸ்கதீட்டர் இதய வால்வு சிகிச்சைகள் மையத்தின் இயக்குனர் டாக்டர் அனந்தராமன் கூறியதாவது: “உலகளவில் இந்த நோய் வகையினத்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதல் சிகிச்சை என்ற பெருமையை இது பெறுகிறது. உலகெங்கிலும் இதே போன்ற அதிக ஆபத்துள்ள எண்ணற்ற நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை இது வழங்கியுள்ளது” என்றார். மேலும் முதுநிலை இதயவியல் நிபுணர் டாக்டர். சி. சுந்தர், முதுநிலை இதய மார்பறை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். அருண்குமார் கிருஷ்ணசாமி மற்றும் ஒட்டுமொத்த பிற பணியாளர்களை உள்ளடக்கிய இதய சிகிச்சைக் குழு உறுப்பினர்களுக்கு இந்த வெற்றிகர சாதனைக்காக தனது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.

இந்தச் சவால்களை எதிர்கொள்ள முதன்முறையாக ஒரு டிரான்ஸ்-கதீட்டர் உத்தியை நாங்கள் உருவாக்கினோம். ஒரு சிறப்பு வெளிப்புற உறை கொண்ட செயற்கை வால்வைத் தயாரித்த நாங்கள் அதை மிகத் துல்லியமாக, மார்பைத் திறக்காமல் தொடை சிரை வழியாகவே செலுத்தி பாறை போன்று இறுகிய அந்தப் பகுதியில் கசிவு ஏற்படாதவாறு பாதுகாப்பாகப் பொருத்தினோம். இதற்கு முன் இது போன்ற சிக்கலான சிகிச்சைகள் திறந்த இதய அறுவை சிகிச்சை மூலமே செய்யப்பட்டன. ஆனால் நாங்கள் ஒரு சிறு துளை வழியாகவே இந்த புதிய சாதனையை நிகழ்த்தினோம். இந்த புரட்சிகர சிகிச்சைக்கு பிறகு நோயாளி ஒரே வாரத்தில் நலமுடன் வீடு திரும்பினார்” என்று அவர் விளக்கமளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சென்னை மண்டல எஸ்பிஐ அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம்
2 ஆம் கட்டம் தொடக்கவிழா
இந்தியா முழுவதும் 500க்கு மேற்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறைகளை அமைத்த ஹிமாலயா பேபி கேர்
எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷன் தொடக்கம்
சென்னையில் நடைபெறும் ஹாக்கி போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

100 வது ஆண்டில் 4000 இயற்கை வண்ணங்களில்

October 6, 2024
55 Views
தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் 25-வது கிளை சென்னையில் துவக்கம்
மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு!!
மாற்றுத்திறனாளிகளின் சுய உதவிக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account