கிருஷ்ணகிரி, செப். 17 –
பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காவேரிப்பட்டினத்தில் பா.ஜ.கவினர் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கி பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். அதிகாலை 6:00 மணிக்கு காவேரிப்பட்டணம் விநாயகர் கோவிலில் சுமார் 40 நிமிடமாக யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவர் ExArmy சக்திவேல் தலைமை தாங்கினார்.
ராணுவ பிரிவு மாநில செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சரண்யா, விவசாய அணி முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள். பின்னர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. காவேரிப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச் செயலாளர் சபரி, சத்யராஜ், பொருளாளர் வடிவேல், துணைத்தலைவர் மாதேசன், குமரேசன், சங்கீத் குமார், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



