காரைக்குடி, ஆக, 03 –
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வள்ளல் அழகப்பச் செட்டியார் அவர்களின் கொடையால் வழங்கப்பட்டுள்ள நானூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வள்ளல் அழகப்பச் செட்டியார் மாதிரி பள்ளியின் பவளவிழா ஆண்டுவிழா நிகழ்ச்சியானது பேராசிரியர், பதிவாளர் செந்தில்ராஜன் வரவேற்புரையாற்றிட துணை வேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி , தவத்திரு. பொன்னம்பல அடிகளார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கல்வி நிர்வாகத்தினர் வைத்த கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதாகவும், விரைவில் நல்ல முடிவு வரும் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், திமுக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே. எஸ். ரவி , காரைக்குடி மேயர் முத்துத்துரை, துணை மேயர் குணசேகரன் , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாவட்ட மேனாள் கவுன்சிலர் நாகனி பா. செந்தில்குமார், மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியப் பெருமக்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.